Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

moondru mudichu serial episode update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி வந்து வாத்தியாரிடம் யாரை கேட்டீங்க வந்து பாடம் எடுத்துக்கிட்டு இருக்கீங்க என்னோட பர்மிஷன் கேட்கணும் என்று இரண்டு பேரும் திட்டுகின்றனர். இவளுக்கு பாடம் எடுக்க வந்திருக்கீங்களே இதை யார் தெரியுமா கால காலமாய் இவங்க குடும்பம் எங்க வீட்ல தோட்ட வேலை செஞ்சவங்க இவ படிச்சா இந்த படிப்பிற்கு என்ன வேல்யூ என்று கேட்டுவிட்டு நந்தினியிடம் இப்போ நீ படிச்சு என்ன பண்ண போற வீட்டு வேலைதான செய்யப் போற அதை போய் செய் என்று சொல்லிவிட்டு வாத்தியாரே கிளம்பச் சொல்லிவிடுகிறார். அவரும் கிளம்பி வெளியில் வந்துவிட நந்தினி காபி கப்புடன் வந்து உங்களுக்காக கல்யாணம் அண்ணன் காபி போட்டு இருக்காங்க எடுத்துக்கோங்க என்று சொல்ல வேண்டாமா என்று சொன்ன நந்தினி அவங்க ரொம்ப நல்லவங்க அவங்க பேசியதை எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க என்று சொல்லுகிறார். ஒரு பொண்ணோட படிப்புக்கு ஒரு பொண்ணு எதிரியா இருக்கிறதா இங்கதான் பாக்குறேன் என்று சொல்ல, உடனே நந்தினி சூர்யா சார் கஷ்டப்பட்டு என்ன படிக்க வைக்கணும்னு நினைக்கிறாரு கண்டிப்பா நான் கஷ்டப்பட்டு படிச்சி அவர் சொன்ன டிகிரியை வாங்குவேன் என்று சொல்லுகிறார் உடனே வாத்தியாரும் ரொம்ப நல்ல விஷயமா என்று சொல்லி பாராட்டிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் குடும்பத்தினரிடம் ஹரிதா சூர்யா அவங்க அப்பா மேல பாசமா இருக்கிற மாதிரி தான் சொல்றா ஆனா வெளியே கூப்பிட்டு வருவதற்கு எந்த வழியும் பண்ணல என்று சொல்லிக் கொண்டிருக்கார் அந்த நேரம் பார்த்து ரஞ்சித் போனில் பதற்றமாக பேசிக்கொண்டு சிஸ்டமில் வேலை விஷயமாக பேசுகிறார் இதை கவனித்து சுந்தரவல்லி இது மாதிரி தான் சூர்யா இருக்கணும்னு ஆசைப்பட்டேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி வெளியில உட்கார்ந்து கொண்டிருக்க கல்யாணம் காபி கொடுக்கிறார். நந்தினி வாத்தியார் போனதை நினைத்தும் படிப்பு நின்னு போச்சு என்ற விஷயத்தை சொல்லி வருத்தப்படுகிறார். இது எல்லாத்துக்கும் அந்த அமெரிக்காவில் வந்திருக்கிற கொள்ளி பிசாசு தான் காரணம் சின்னையா வரட்டும் கண்டிப்பா சொல்லணும் என்று சொல்ல, நந்தினி ஏற்கனவே நிறைய பிரச்சனை போய்கிட்டு இருக்கு சொல்ல வேண்டாம் என சொல்லி விடுகிறார். மாதவி வந்து இன்விடேஷன் மெயில் அனுப்பி இருக்காங்க உங்கள பாத்துட்டு கால் பண்ண சொன்னாங்க என்று சொல்ல மாதவி நந்தினியுடன் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க சொல்ல அவரும் கொடுக்கிறார். பிறகு குடும்பத்தினர் அனைவரும் எப்படி வந்திருக்குன்னு பார்க்கலாமென்று குடும்பத்தினர் பார்த்து கொண்டிருக்கிற மாதவி திரும்ப யார் கொண்டு போய் இருக்காங்க இங்கே இரு என்று நந்தினி இடம் சொல்லுகிறார். உடனே எல்லா பேரும் கரெக்டா இருக்கு ஆனா எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு என்று சொல்லிக் கொடுக்க அப்போது மாதவி படித்துப் பார்க்க எல்லாமே சரியா தான் இருக்கு என்று சொன்னவுடன் ரஞ்சித் நந்தினி சிஸ்டர் பேர் இல்லையே என்று கேட்கிறார்.

உடனே சுந்தரவல்லி இது ஃபேமிலி ஃபங்ஷன் குடும்பத்தில் இருக்கிறவங்க பேர் மட்டும் தான் போட முடியும் என்று சொல்ல, ரஞ்சித் நீங்க சொல்றத ஏத்துக்க முடியாது கண்டிப்பா நந்தினி சிஸ்டர் பேர் போடணும் என்று சொல்ல, ஹரிதா திட்டுகிறார். இது என்னோட கல்யாணம் அது எனக்கு புடிச்ச மாதிரி தான் இருக்கணும் எனக்காக நீங்க இதை பண்ணி தான் ஆகணும் என்று ரஞ்சித் சொல்ல சுந்தரவல்லி வேறு வழியில்லாமல் மாதவி இடம் ரஞ்சித் சொன்ன மாதிரி செஞ்சிடு என்று சொல்லிவிட்டு கோபமாக சென்று விடுகிறார். மறுபக்கம் சூர்யா வக்கீலை சந்தித்து அடுத்த இயரிங் எப்போ இருக்கும் என்று கேட்கிறார். காசு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை யாராச்சும் பெரிய வக்கீல் கூட வைக்கலாமா என்று கேட்க இந்த கேசுக்கு அவ்வளவு தூரம் போக வேண்டிய அவசியம் இல்லை அப்படி இருந்தால் நானே சொல்லுவேன் என்று சொல்லுகிறார். கண்டிப்பா உங்க தங்கச்சி கல்யாணத்துக்குள்ள வெளியே எடுத்துட்டு வந்துடலாம் தைரியமா இருங்க சொல்லுகிறார். மறுபக்கம் நம்ம போறது சேட்டு கல்யாணம் ஸ்வீட் எல்லாம் இருக்கும் சீக்கிரம் வாமா நான் ரெடி ஆகி உட்கார்ந்துட்டு இருக்கேன் என்று சொல்ல நான் ரெடியாக இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு ஹாலில் வெயிட் பண்ண சொல்லுகிறார். ரஞ்சித் மாதவி டிரஸ் மாத்துவது எப்படி ஆவது பார்த்துவிட வேண்டும் என்று கதவு சந்தில் பார்த்துக் கொண்டிருக்கிற நந்தினி கவனித்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.

உடனே சுரேகாவுடன் கண்ணாமூச்சி விளையாடுகிறேன் என்று சொல்லி சமாளித்து விட நந்தினி கிச்சனுக்கு வந்து சமைக்க வர கல்யாணம் வெளியில் போகச் சொல்லுகிறார். மாதவி மற்றும் அசோகன் இருவரும் ஃபங்ஷனுக்கு கிளம்ப சுரேகா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க நானும் வந்தேன் என்று சொல்ல மாதவி உனக்கு நிச்சயமான பிறகு வெளியே வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கார் சத்தம் கேட்டவுடன் நந்தினி கிச்சன்ல இருந்து ஓடி வந்து வேக வேகமாக படிக்க உட்கார்ந்து விடுகிறார். சூர்யா மேலே வந்தவுடன் ரஞ்சித் பத்திரிக்கையில் நந்தினி பேர் இல்லாத விஷயத்தையும் அதை ஆண்டிகிட்ட சொல்லி நான் ஸ்ட்ரிக்டா போடணும்னு சொல்லிட்டேன் உனக்கு ஓகே தானே என்று சொல்லி கேட்கிறார்.

நான் சொன்னேனே உங்க ஆண்ட்டிகிட்ட ஒரு விஷயத்தை சொல்லிடுரியா உங்க இன்வெட்டிஷன்ல எங்களோட ரெண்டு பேரு பேரும் இருக்கக் கூடாது நீ சொல்லி தான் எங்க பேரு போடணும்னு எந்த அவசியமும் இல்லை. நான் சவால் விட்டு சொல்றேன் நந்தினியோட பெயர் இந்த வீட்ல கண்டிப்பா மாறும் அதுவரைக்கும் எதிலும் எங்க பேர் வேணா அதையும் மீறி வந்தால் நடக்கிறது வேற என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். நந்தினி படித்துக் கொண்டிருப்பதை பார்த்து சூர்யா பாராட்டி விட, சரி டெஸ்ட் எழுதின மார்க் சீட் ரிசல்ட் எங்கே கொடுங்க என்று கேட்கிறார். நந்தினி தயங்கிக் கொண்டே இருக்க சரி நான் உங்க மாஸ்டர் கிட்ட பேசிக்கிறேன் என்று சொல்லி போன் போடுகிறார். மார்க் சீட் ரிசல்ட் குறித்து அவரிடம் கேட்க முதலில் 50 க்கு 48 என்று சொன்னவுடன் சூர்யா சந்தோஷப்பட அப்படி சொல்லணும்னு எனக்கு ஆசைதான் ஆனா நான் மார்க் ஷீட் திருத்துறதுக்குள்ள அங்கிருந்து கிளம்பிட்டேன் என்று சொல்லி சுந்தரவல்லி நடந்து கொண்ட விஷயம் அனைத்தையும் சூர்யாவிடம் சொல்லிவிடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial episode update
moondru mudichu serial episode update