Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

moondru mudichu serial episode update 01-07-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் திருவிழா முடிந்து அனைவரும் வீட்டுக்கு வந்து இறங்குகின்றனர். சுரேகா டயர்டா இருக்கு ரெஸ்ட் எடுக்கலாம் என்று சொல்ல அசோகன் வேலை பார்த்தா தானே டயட் ஆகும் சும்மா இருந்தா எப்படி டையார்ட் ஆகும் என்று கேட்கிறார். வந்தவுடனே நந்தினி கிச்சனுக்கு வந்து வேலையை ஆரம்பிக்கிறார். கல்யாணம் சின்னையா கையில கயிறு கட்டணும்னு சொன்னீங்க கையில எதுவும் காணமே என்ன ஆச்சு என்று கேட்க நந்தினி நடந்த விஷயங்களை கல்யாணத்திடம் சொல்லுகிறார். அப்போ ரெண்டு பேருக்கும் நைட் டியூட்டி கன்பார்ம் என்று சொல்லுகிறார். எல்லோரும் பசியா இருக்காங்க நம்ம சமைக்க ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருவரும் சமையல் வேலையை பார்க்கின்றனர்.

சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் அந்தப் பொண்ணு பூக்குழி இறங்குறது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்று கேட்க எனக்கு எதுவும் தெரியாது நான் எதுவும் சொல்லல அது நந்தினி எடுத்த முடிவு என்று சொல்ல, அந்த நேரம் பார்த்து கம்பெனியிலிருந்து மேனேஜர் ஃபோன் பண்ணி சம்பளத்திற்கு செக்கில் சைன் பண்ண சொல்லி கேட்டு இருக்காங்க நாளைக்கு வர சொல்லி இருக்கேன்னு சொல்லுகிறார். சரி நீ நாளைக்கு கையெழுத்து போட்டு கொடு என்று அருணாச்சலம் சொல்ல, சுந்தரவல்லி நான் கையெழுத்து போடுற செக்கில் அவளும் போடணுமா அதை நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என மனதுக்குள் நினைக்கிறார். சுரேகா கிச்சனுக்கு வந்து எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பிட என்ன இருக்கு என்று கேட்க, சப்பாத்தியும் காலிபிளவர் குருமாவும் என்று சொல்ல சுரேகா கோபப்படுகிறார்.

காலிஃப்ளவர் பண்ணாதீங்க கேப்ஸிகம் பண்ணுங்கன்னு எவ்வளவு வாட்டி சொல்றது என்று சொல்லி கோபப்பட, யார் பண்றது என்று கேட்க நந்தினிதாம்மா என்று கல்யாணம் சொல்ல நீ போய் அவளை கூட்டிட்டு வா என்று சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா எதுக்கு நந்தினி கட்டலாம் வேண்டாம் என சொல்ல டாக்டர் கிட்ட சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். எனக்கு கைல கட்ட அவிழ்த்தா ரொம்ப சந்தோஷம் தான் ஏன்னா நீங்களே கையெழுத்து போட்டு இருப்பீங்க என்று சொல்லுகிறார். கையெழுத்துக்கு போய் எதுக்கு பயப்படுற என்ற சொல்ல ஏதாவது தப்பு நடக்குமோன்னு பயமா இருக்கு என்று சொல்ல எதுவும் நினைக்காத ஃப்ரீயா விடு என்று சொல்லுகிறார். கல்யாணம் வந்து சுரேகா சொன்ன விஷயத்தை சொல்ல நந்தினி நானும் மறந்துட்டேன் ஏற்கனவே ஒருவாட்டி எனக்கு ஃபோனை பார்த்து அதை எப்படி செய்யணும்னு சொல்லி கொடுத்தாங்க நான்தான் மறந்துட்டேன் அஞ்சு நிமிஷத்துல செஞ்சு கொடுத்துடலாம் என்று நந்தினி கிளம்ப, சூர்யா நந்தினியை ரூமில் உட்கார வைத்துவிட்டு என் தங்கச்சிக்கு கேப்சிகம் பொரியல் நான் பண்ணி கொடுத்துட்டு வரேன் என கல்யாணத்தை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

சூர்யா கீழே இறங்கி வந்து கல்யாணத்திடம் பசிக்குது என்ன டின்னர் என்று கேட்க சப்பாத்தி காலிஃப்ளவர் குருமா என்று சொல்ல இந்த நந்தினிக்கு அறிவே இல்ல, நான்தான் கேப்ஸிகம் செய்ய சொல்லி இருந்தேனே என்று சொல்ல அந்த காய் உங்களுக்கும் பிடிக்குமா என்று கேட்க எனக்கு பிடிக்குமா வேற யாருக்கு பிடிக்கும் என்று கேட்க தோ சுரேகா அம்மாவுக்கும் என்று சொல்ல சுரேகா சந்தோஷப்படுகிறார். எனக்கு வந்து பார்த்த உடனே காலிஃப்ளவர் குருமா இருந்த உடனே கடுப்பா ஆயிடுச்சு என்று சொல்லுகிறார்.

நீ தான் சொல்லி குடுத்தியா அப்போ நீயே போய் சமை எது வேணும்னாலும் கல்யாணத்துக்கு கிட்ட கேளு என்று சொல்லி என் தங்கச்சி கையால் இன்னைக்கு கேப்ஸிகம் சாப்பிட போறேன் என்று சொல்லுகிறார். நீ போய் பண்ணுடா என்று செல்லமாக சொல்ல, என்ன அண்ணா என்ன போய் பண்ண சொல்ற என்று சொல்ல நீ என்ன பிரிட்டிஷ் இளவரசியா நீ பண்ணா கேப்ஸிகம் வேகாதா போய் பண்ணுடா உனக்கு புடிச்ச நீ தான் பண்ணனும் போய் சமைத்து எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார். இப்ப இவன் எதுக்கு இங்க வந்தான் என்று மனதுக்குள் நினைக்கிறார். சுரேகா சமைக்க தயங்க நீ போ அண்ணா நான் சமைக்கிறேன் என்று சொல்ல அதெல்லாம் இல்ல நீ இன்னைக்கு சமைக்கணும் அத நான் பாக்கணும் அதை டேஸ்ட் பண்ணனும் என்று சொல்லுகிறார். போய் பண்ணுடா தங்கம் என்று சுரேகாவை கிச்சனுக்கு அனுப்புகிறார். கல்யாணம் சுரேகாவிற்கு எப்படி சமைக்க வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார்.

சுரேகா கல்யாணத்திடம் முதலில் என்ன செய்யனும் என்று கேட்க அடுப்பை பத்த வைக்கணும் என சூர்யா சொல்லிவிட்டு கிச்சனுக்கு வருகிறார். எது எங்க இருக்கு எவ்வளவு போடணும் எதுவுமே தெரியல அப்படித்தானே இப்ப தெரியுதா சமைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு, அதையும் தாண்டி எல்லாரும் சமைச்சு வச்சா இது சரி இல்ல அது சரியில்லைன்னு குறை சொல்ல வேண்டியது. எதுக்கெடுத்தாலும் நந்தினியை கூப்பிடுன்னு கத்தக்கூடாது, உனக்கு சமைக்க தான் நந்தினி இருக்காளா உங்களுக்கு என்ன வேணுமோ அதை நீங்கதான் சமைச்சுக்கணும் இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். நந்தினி கீழே இறங்கி வர, சுரேகா எதிரில் வருகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சுந்தரவல்லி இடம் என் பொண்டாட்டி ஒன்னும் வேலைக்காரி கிடையாது இந்த வீட்டோட மருமக என்று சொல்ல சுந்தரவல்லி முதல்ல இந்த வார்த்தையை சொல்றத நிறுத்த சொல்லுங்க காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்துன மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார்.

சூர்யா சாருக்கு அடிபட்டு இருக்கும்போது எப்படிமா போறது என்று கேட்க அவனுக்கு நான் அம்மா நான் பாத்துப்பேன் என சொல்ல சூர்யா என்ன நந்தினி தான் பாத்துப்பா என்று சொல்லுகிறார். என் தாத்தா கம்பெனி ரன் ஆகணும்னா என் பொண்டாட்டி சைன் இருந்து தான் ஆகணும் என்ற உறுதியாகச் சொல்ல சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial episode update 01-07-25