தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் ராஜாங்கம் சாமி ஆடிய பெண்ணுக்கு பணத்தை கொடுத்து யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் அன்புக்கு விழற சாட்டை அடியில விஷத்தை கலந்து அவன் இரத்தத்தில் கலக்குற மாதிரி பண்ணனும் என்று சொல்ல அவரது தம்பி சரியென சொல்லிவிட்டு செல்கிறார். கோவிலுக்கு அன்பு தயாராகி வர ஆனந்தி மகேஷிடம் நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார் நீங்க சொல்லுங்க என்று சொல்ல மகேஷ் பேசாமல் அமைதியாக இருக்க சாட்டை எடுத்துக் கொண்டு கோவிலில் இருந்து கிளம்புகின்றனர். பிறகு ஒருவர் சாட்டையால் அன்புவை அடிக்க வர ஆனந்தி காலில் விழுந்து கெஞ்சுகிறார். பிறகு சாட்டை அடியை தாங்க முடியாமல் அன்பு இருக்க ஆனந்தி இதுக்கு மேல விட்ருங்க அவரை பாவம் என்ன வேணா அடிங்க என்று சொல்ல வேண்டுதலை முடித்துக் கொண்டு கோவிலுக்கு வருகின்றனர். உடனே அந்த சாமி ஆடிக்கொண்டு வந்த பெண்மணி மீண்டும் சாமியாடி அன்பு சாட்டையால் அடிக்கப் போக அன்பு மயங்கி விழுகிறார். உடனே மகேஷ் அவரைத் தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் ஓடி வந்து படுக்க வைத்து பார்க்கச் சொல்லுகிறார். அன்பு வை செக் பண்ணி பார்த்த வைத்தியர் ஆனந்தியை பார்க்க, இந்த பொண்ணு யாரு என்று கேட்கிறார்.
இவரோட பொண்டாட்டி என்று சொல்ல உடனே ஆனந்தி காலில் விழுந்து எப்படியாவது காப்பாத்துங்க என்று கெஞ்சுகிறார் உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க இந்த பொண்ணுக்கு மருந்து வாங்க தான் இவர் வந்தார் என்று சொல்ல இவர் உடம்புல விஷம் கலந்து இருக்கு என்று சொன்ன வைத்தியர் மருந்து தயார் செய்கிறார். மகேஷ் இது எல்லாத்துக்கும் சூர்யா குடும்பம் தான் காரணமாக இருக்கும் அவங்கள என்ன பண்றேன்னு மட்டும் பாரு என்று சொல்ல, ஆனந்தி மகேஷை தடுத்து நிறுத்துகிறார். சுந்தரவள்ளியும் சூர்யாவும் ராஜாங்கத்திடம் நல்ல கபடி டீம் வேணும் அந்த மகேஷ் டீமை தோற்கடிக்கணும் என்று சொல்ல நந்தினி இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்க மாதவி மற்றும் அசோகன் வருகின்றனர். இந்த கபடியில் ஜெயித்தே ஆகணும் இது குடும்ப கவுரவம் என்று சுந்தரவல்லி சொல்லிவிட்டு சென்றவுடன் நந்தினி வந்து சூர்யாவிடம் பேசுகிறார். இந்தப் போட்டி எல்லாம் வேண்டாம் நீங்க வந்து அன்பு பாருங்க என்று சொல்ல என்னால முடியாது என்று சொல்லிவிட்டு சூர்யா சென்று விட வைத்தியர் ஆனந்தியிடம் இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாரு இந்த மருந்தை அவருக்கு கொடுங்க என்று சொல்ல மகேஷ் ஆனந்தியிடம் உங்கள கூட்டிட்டு வந்தது என் தப்பு தான் என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்ல ஆனந்தியும் பதிலுக்கு மன்னிப்பு கேட்கிறார் அந்த நேரம் பார்த்து அன்பு கண் விழித்து பார்க்கிறார்.
நந்தினி ஆனந்திக்கு போன் போட்டு அன்புவிடம் நலம் விசாரிக்க, மகேஷ் போனை வாங்கி இப்ப எதுக்கு போன் பண்ணி இருக்கீங்க உங்களால தான் இவ்வளவு பிரச்சனை என்று சொல்ல, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க கபடி போட்டி வேண்டாம் அதனால பிரச்சனை தான் வரும் என்று சொன்ன, மகேஷ் நாங்க கபடி போட்டியில் ஜெயிச்சு உங்க முகத்துல கரியை பூச தான் செய்வோம் என்று சொல்லி ஃபோனை வைக்க வைத்தியர் வந்து இவர் தூங்காம இருக்கணும் என்று சொல்ல ஆனந்தி நான் பாத்துக்குறேன் என்று சொல்ல மகேஷ் நானும் இங்கேயே இருக்கேன் என்று சொல்ல அன்பு நமக்கு மேட்ச் முக்கியம் நீங்க போய் பாருங்க என்று சொல்லி அனுப்புகிறார். கொஞ்ச நேரத்தில் அனைவரும் எதிர்பார்த்த கபடி போட்டி தொடங்குகிறது. அதில் ராஜாங்கத்தின் தம்பி வீரா ஒரு அணியும் மகேஷ் அணியும் முதலில் மோதுகின்றனர். ராஜாங்கம் அருணாச்சலத்துடன் எல்லா போட்டியிலேயும் இவங்க ஜெயிக்கணும்னு தான் நான் நெனச்சிருக்கேன் ஆனா இந்த போட்டியில் இவங்க ஜெயிக்கணும் ஐயா என்று சொல்ல அருணாச்சலம் வீராவிடம் அதெல்லாம் இல்ல உங்க திறமையை நீங்க காட்டுங்க என்று சொல்லுகிறார். மகேஷ் டீமில் இருக்கும் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட மகேஷ் என்ன செய்வதென புரியாமல் இருக்க அந்த நேரம் பார்த்து மகேஷுக்கு தெரிந்த ஒருவர் வருகிறார்.
முத்து வந்தவுடன் அன்பு எங்கே என்று கேட்க அதெல்லாம் அப்புறம் சொல்றேன் இப்போதைக்கு டீம்ல ஒரு ஆள் கம்மியா இருக்கு நீ வந்து விளையாடு என்று கூப்பிட, மறுபக்கம் சூர்யா மகேஷ் டீமை சூரியா கிண்டலடித்து பேசுகிறார். அதற்கு மகேஷ் வீரா டீமை ஓட விட்டுட்டு உன்ன பைனல்சில் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். உடனே அங்கிருந்து அனைவரும் கிளம்பி விட பார்வதி மகேஷுக்கு ஜெயிக்க வாழ்த்து சொல்லி அனுப்ப ஆட்டம் ஆரம்பிக்கிறது. டாஸ் தொடங்க மகேஷ் டீம் டாஸ் வின் பண்ணி ரைடு போக முடிவு எடுத்து மகேஷ் களத்தில் இறங்குகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் கபடி போட்டி தொடங்க முதலில் மகேஷ் நன்றாக விளையாட பிறகு ராஜாங்கமும் அவரது மனைவியும் அவரது தம்பியை ஜெயிக்க வைக்க திட்டம் போடுகின்றனர். அதேபோல் மகேஷ் டீமிலும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க டீம் சொதப்புகிறது.
மறுபக்கம் அன்புவை கொலை பண்ண இரண்டு ஆட்கள் வர ஆனந்தி அவர்களிடம் சண்டை போட்டு அன்புவை காப்பாற்ற பரமு மகேஷ்காக மோரை மந்திரச்சு கொடுத்ததாக ராஜாங்கம் வீராவிடம் சொல்லுகிறார். இதனால் மகேஷுக்கு மயக்கம் வருவது போல ஏற்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu and singapenne serial promo 28-01-26

