Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகேஷ் சொன்ன வார்த்தை, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

moondru mudichu and singapenne serial episode 23-01-26

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்கப் பெண்ணே சீரியலும் மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் சூர்யா சார் மனசுல நீங்க தான் இருக்கீங்க என்று ஆனந்தி சொல்ல அவருக்கு என் மேல ஒரு குற்ற உணர்ச்சி இருக்கே தவிர அவர் மனசுல எனக்கு இடம் இல்ல என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல உங்க மனசுல சூர்யா சார் இருக்கிறது வெளிச்சமா தெரியுது என்று சொல்ல, நான் முதல்ல கோவமா தான் இருந்த இப்போ அவர் மேல பாசம் அதிகமாக இருக்கிறது உண்மைதான் என்று சொல்லுகிறார். பிறகு நந்தினி ஆனந்திக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூர்யா சாருக்கு உங்க மேல இருக்கிறது பாசம் தான் நிரூபித்து காட்டுகிறேன் என ஆனந்தி சொல்ல நந்தினி நானும் நிரூபித்து காட்டுகிறேன் என்று சொல்லி இருவரும் கிளம்புகின்றனர். சுந்தரவல்லி இடம் வந்து பரமு வெத்தலையை மடித்துக் கொடுக்க மாதவியும் வருகிறார். மறுபக்கம் ராஜாங்கமும் பார்வதிக்கு வெத்தலையை கொடுக்கிறார். உடனே பரமு மாதவி இடம் போன வருஷம் கூட கல்யாணம் ஆகலன்னு அம்மா வருத்தப்பட்டுட்டு போனாங்க அதுக்கப்புறம் அம்மன் கழுத்துல இருக்குற முத்துமாலை நகையை வாங்கி உன் கழுத்துல போட்டப்போ இந்த வருஷம் புருஷனோட வந்திருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்லுகிறார்.

பார்வதி மகேஷ் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட மாட்டேங்குறான் என்று சொல்லுகிறார். நம்ம ஊர் திருவிழாவுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு அவங்களை போய் கூட்டிட்டு வரான் என்று கோபப்படுகிறார். உடனே ராஜாங்கம் நம்ம கோவில் விசேஷமே கல்யாணம் ஆகுறதுக்கு தானே அம்மன் கழுத்துல இருக்குற முத்துமாலை வாங்கி மித்ராமா கழுத்தில் போடுங்க என்று சொல்ல பார்வதி என்ன சொல்றீங்க என்று கேட்க மறந்துட்டீங்களா எல்லாமே ஏலத்துக்கு போகும் ஆனா முத்துமாலை எப்பவுமே பெரிய வீட்டு குடும்பத்துக்கு தானே என்று சொல்ல பார்வதி யோசிக்கிறார். இந்த வருஷமும் நான்தான் வாங்கப் போகிறேன் மாதவிக்கு கல்யாணம் ஆன மாதிரி சுரேகாவுக்கும் அடுத்த வருஷம் வரும்போது அவ புருஷனோட வரணும் என்று சொல்ல, உடனே பரமு இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன் பார்வதி அம்மா இந்த வருஷம் முத்து மாலையை வாங்க முடிவு பண்ணி இருக்காங்க என்று சொல்ல அப்படி எல்லாம் இருக்காது என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். நீங்க வேணா பாருங்க இந்த வீட்டில் இருந்து வெளியே போறதுக்குள்ள அவங்களே வந்து முத்து மாலையை விட்டுக் கொடுக்க சொல்லி கேட்பாங்க என்று சொல்லுகிறார். மறுபக்கம் பார்வதி வருஷ வருஷம் சுந்தரவல்லி தான வாங்கி கிட்டு இருக்கா என்று கேட்க இத்தனை வருஷம் நீங்க விட்டுக் கொடுத்தீங்க இல்ல இந்த வாட்டி கேட்டு பாருங்க என்று சொல்லி உசுப்பேத்திகிறார்.

மாதவி சுந்தரவல்லி இடம் முத்து மாலையை கொடுக்கப் போறீங்களா என்று கேட்க சுந்தரவல்லி அமைதியாக இருக்கிறார். மறுபக்கம் ராஜாங்கமும் பார்வதியை மாலையை வாங்கும்படி கட்டாயப்படுத்த மித்ரா எல்லாம் உங்க கையில தான் இருக்கு நீங்க வாங்குங்க என்று சொல்லுகிறார். இந்த வாட்டி முத்துமாலை உனக்கு தான் மித்ரா நான் வீட்டிலேயே சுந்தரவல்லி கிட்ட பேசுறேன்னு சொல்லுகிறார். மறுபக்கம் பரமு சூர்யா ஏலத்துக்கு கிளம்பி கொண்டிருக்க அவர்களிடம் நந்தினி அம்மாவையும் ஆனந்தி அம்மாவையும் கடைவீதிக்கு சுத்தி காட்டுங்க என்று சொல்ல, சூர்யாவும் ஆனந்தியும் கடைவீதிக்கு கிளம்ப நீங்க போங்க கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என மித்ரா சொல்லுகிறார். உடனே குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட, அருணாச்சலம் தில்லை வரலையா என்று கேட்க மகேஷ் மட்டும் வரான் அவர் கொஞ்சம் மீட்டிங்ல மாட்டிக்கிட்டாரு என்று சொல்லுகிறார். பார்வதி சுந்தரவல்லி இடம் ஏலத்தில் முத்துமாலை எடுக்கிறது பற்றி பேச ஆரம்பிக்க, உடனே சுந்தரவல்லி சுரேகாவுக்காக வாங்கலாம்னு இருக்கேன் என்று சொல்லிவிட்டு அப்படியே பேச்சுவாக்கில் பார்வதி பேசுவதை கவனிக்காமல் சென்றுவிட மித்ராவிடம் சரி ஏலத்தில் போய் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.

திருவிழாவில் நந்தினி ஆனந்தியும் வளையலை விலை பேசி வாங்கிக்கொள்கின்றனர். உடனே சூர்யாவும் அன்பும் வந்து விடுகின்றனர். உடனே அச்சு மருதாணி கடைக்கு போகின்றனர். அங்கே பேசிக் கொண்டிருக்கும்போது மகேஷ் வந்து கூட அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். உடனே மருதாணியை சூர்யா செலக்ட் பண்ண சொல்ல நந்தினியும் ஆனந்தியும் சூர்யா அன்புவை செலக்ட் பண்ண சொல்லுகின்றனர். இருவரும் சேர்ந்து ஒரே டிசைனை செலக்ட் பண்ணுகின்றனர்.பிறகு இருவரும் மாறி மாறி அவர்களது மனைவிக்கு மருதாணி வைத்துவிட கொஞ்ச நேரத்தில் ஏலம் தொடங்குகிறது அதில் அம்மனுடைய வளையல் மஞ்சள் குங்குமம் என ஒரு பாக்ஸில் இருக்கும் அதன் ஆரம்ப விலை 150 என சொல்ல அந்த ஏலம் தொடங்க அன்பும் ஏலம் கேட்க 250 ரூபாய்க்கு அது அன்புக்கு கிடைக்கிறது.

நந்தினி பட்டுப்புடவைக்கு ஆசைப்பட சூர்யா அதை கவனிக்கிறார். மறுபக்கம் ராஜாங்கத்தின் மனைவியும் ஆசைப்பட, இருவரும் ஏலம் கேட்கின்றனர். உடனே ராஜாங்கம் விட்டுக் கொடுக்க 5,000-க்கு புடவையை வாங்கி நந்தினி இடம் கொடுக்கிறார். பிறகு அடுத்த அடுத்த ஏலங்கள் நடக்கிறது. ராஜாங்கத்தின் தம்பி முத்துமாலையாவது கேள் என்று சொல்ல , பரமு இங்கே இருக்கிறது எல்லாம் ஏலம் தான் ஆனால் முத்துமாலை மட்டும் எப்பவுமே சுந்தரவல்லி அம்மா குடும்பத்துக்கு தானே என்று சொல்லுகிறார். உடனே ராஜாங்கம் பார்வதியிடம் நீங்கள் ஏலம் கேளுங்க என்று சொல்ல, பார்வதி சுந்தரவல்லி இடம் இந்த வாட்டி முத்துமாலையை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்ல சுந்தரவள்ளியின் முகம் மாறுகிறது. இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் மகேஷ் எதிரி நம்ம பக்கத்துலயே இருக்கான்னு நினைக்கிறேன் என்று சொல்ல, யாரா ஒண்ணா இருக்கட்டும் அடிச்சு காலி பண்றோம் இல்ல சூர்யா சொல்லுகிறார். நந்தினி அது பெரிய பிரச்சனையாயிடும் ரெண்டு குடும்பமும் சேர்ந்துதான் கிரீடம் வைக்கணும் என்று சொல்ல சூர்யா அது மகேஷ் கைல தான் இருக்கு என்று சொல்லுகிறார்.

ஆனந்தி சுந்தரவல்லி இடம் சாப்பாடு மேல கோபத்தை காட்ட வேண்டாமே என்று சொல்ல உன்னோட அட்வைஸ் எல்லாம் அங்க வச்சுக்கோ என திட்டுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu and singapenne serial episode 23-01-26
moondru mudichu and singapenne serial episode 23-01-26