moondru mudichi serial promo update
நந்தினியுடன் சூர்யா வீட்டுக்கு வந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா ,அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி உள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுதாகர் சுந்தரவல்லியை இன்னும் கோபப்படுத்தி பேசி நக்கல் அடிக்கிறார். உங்க குடும்பத்தை தோப்புல உட்கார வைத்து சோறு போடும்போதே நெனச்சேன் உங்க குடும்பத்தை கூறு போடா போறான்னு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துருச்சு. பாவம் இதுல அண்ணி தான் ஏமாந்து, அவமானப்பட்டு நிக்கிறாங்க.அருணாச்சலம் சுந்தரவல்லி என கூப்பிட, போதும் நிறுத்துங்க.. டேய் சூர்யா போதுமா என்று கேட்க எல்லா புகழும் என் தாய்க்கு என்று சொல்ல, என் முன்னாடி பேசறதுக்கே தயங்குறவங்க எல்லாம் இன்னிக்கு என்ன கை நீட்டி பேசிக்கிட்டு இருக்காங்க, இது போதுமா உனக்கு என்று அழுது கொண்டே கோபமாக பேசுகிறார். அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் விடு என்று சொல்ல நீங்க தான் இது எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்லுகிறார். என்ன அசிங்கப்படுத்துறதா நினைச்சுக்கிட்டு உன் வாழ்க்கையை இப்படி கெடுத்துக்கிட்டயே டா, நீ என் பையன் தானா நீ என் வயித்துல தான் வந்து பொறந்தியா என்றெல்லாம் கேட்டு கோபமாக பேசுகிறார்.
என்னைக்கு இந்த சிங்கார குடும்பம் நம்ம வீட்டுக்கு வந்தாங்களோ அப்பவே எல்லாம் நாசமா போயிடுச்சு. ஏ சிங்காரம் என்று சத்தமாக கூப்பிட அவர் உடனே வந்து அழுது கொண்டே சின்னையா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு கருப்பன் கிட்ட வேண்டிக்கிட்டு வந்தாமா என் பொண்ணு ஆனா எங்களுக்கே காவு வாங்கணும்னு நினைக்கல, என்று அழ ஒழுங்கா தாலியை கழட்டி கொடுத்துட்டு நீயும் உன் பொன்னும் இங்க இருந்து கிளம்புங்க என்று மிரட்டுகிறார்.
கழட்டவே கூடாது என்பதற்காக தான் மூன்று முடிச்ச டைட்டா போட்டு இருக்கேன் என்று சொல்ல நான் வந்து கழட்டி போடுற என்று வர சூர்யா சுந்தரவல்லியின் கையை தட்டி விடுகிறார். இவ என் பொண்டாட்டி இந்த தாலி கயிறு நான் கட்டி இருக்கேன். அதை எடுக்கிற உரிமையும், போடுற உரிமையை எனக்கு மட்டும்தான் இருக்கு கைய வெச்சீங்கன்னா அசிங்கப்பட்டு போயிடுவீங்க என்று மிரட்டுகிறார். உடனே அங்கிருந்த ஒருவர் நடந்தது நடந்துருச்சு அம்மா அப்பா கிட்ட ஆசீர்வாதம் வாங்குங்க என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாக மண்டபத்தை விட்டு வெளியேறுகிறார்.
சிங்காரம் அருணாச்சலத்திடம் அழுது கொண்டே கனவுல கூட என் பொண்ணு யாருக்கும் எந்த கெட்டதும் நினைச்சது கிடையாது, இவங்க சொல்ற மாதிரியெல்லாம் என் பொண்ணு எந்த தப்பும் பண்ணல ஐயா, என்று சொல்ல தெருள போறவங்க சொல்றதெல்லாம் நீ ஏன் கேக்குற இது வந்து சூர்யா போட்ட மூன்று முடிச்சா எனக்கு தெரியல கடவுள் போட்ட முடிச்சா தான் நான் பார்க்கிறேன் என்று சிங்காரத்திடம் சொல்லுகிறார். உடனே சிங்காரம் உங்களுக்கு பட்ட அசிங்கத்துக்கு நாங்க காரணமாகிட்டோமே நினைக்கும் போது மனசு ரொம்ப வருத்தமா இருக்கு ஐயா என்று சொல்லி அழுகிறார். நீங்க பெரிய மனுஷாய உங்களுக்கு சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை தயவு செய்து இதுக்கு அப்புறம் என்ன நடக்கணுமோ அதை பாருங்க என்று அழ அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு மணமேடைக்கு சென்று என்ன சூர்யா பண்ணியிருக்க ஒருத்தர பழி வாங்கணும் என்பதற்காக ஒருத்தரோட வாழ்க்கை அழிச்சிருக்க என்று சொல்லுகிறார்.
நீ உன்னோட அம்மாவ மட்டும் அசிங்கப்படுத்தல நீ எங்க எல்லாரையும் தான் அசிங்கப்படுத்தி இருக்க என்று சொல்லுகிறார். உடனே நந்தினியிடம் உன்னோட மனசு வலி என்னன்னு எனக்கு தெரியுதும்மா என்று ஆரம்பித்த மாதவி வீட்ல போய் பேசிக்கலாம்பா எல்லாரும் இங்கே பார்த்துக்கிட்டு இருக்காங்க, என்று சொல்ல அருணாச்சலம் அவர்களிடம் இங்கே ஒன்று நடக்கல வேற ஒரு கல்யாணம் நடந்திருக்கு அவ்வளவுதான் நீங்க எல்லாரும் சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
பிறகு அனைவரும் காரில் ஏறிக்கொண்டு வீட்டுக்கு வர நந்தினி நடந்த விஷயங்கள் அனைத்தையும் யோசித்துக்கொண்டு கண்ணீர் விட்டுக்கொண்டு வருகிறார். உடனே மாதவியின் கணவர் மாதவி மற்றும் சுரேகா என மூவரும் ஒரே காரில் வர, ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுக்கிறான்.இவன் அரசியலுக்கு போனா அவ்வளவுதான் என்று பேசிக்கொண்டு வர, மாதவி அவன் நான் சொன்னத தான் செஞ்சிருக்கான் என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
என்ன சொல்ற என்று சொல்ல மாதவி சிரித்துக்கொண்டே, நடந்த விஷயங்களை சொல்லுகிறார். சூர்யாவிடம் பேசிவிட்டு சென்ற பிறகு மாதவி தனியாக வந்து சூர்யாவிடம் நீ என்னதான் கல்யாணம் பண்ணாலும் டைவர்ஸ் கொடுத்தாலும் உனக்கு அடுத்த பணக்கார பொண்ணு தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. நீ அம்மாவ ஒரு நாள் அழ வைக்கணும் என்று நினைக்கிறியா? இல்ல லைஃப் ஃபுல்லா அழவேண்டும் என்று நினைக்கிறாயா என்று கேட்க லைஃப் ஃபுல்லா என்று சொல்ல அதற்கு நீ அர்ச்சனா கழுத்தில் தாலி கட்டக்கூடாது அப்போ வேற யாரு கழுத்துல கட்டணும் என்று சூர்யா கேட்க நந்தினியை காட்டுகிறார்.
சூர்யா ஒன்றும் புரியாமல் நிற்க சுந்தரவல்லிக்கு ஒரு தோட்டக்கார சம்பந்தி தோட்டக்கார மருமக எப்படி இருக்கோ முகத்தில் ரத்த கண்ணீர் வராது என்று வில்லத்தனமாக பேச சூர்யாவும் எஸ் எஸ் என்று கரெக்ட் சொல்லுகிறார். மாதவி உடனே அப்போ தாலிய நந்தினி கழுத்தில் கட்டு என்று சொல்லுகிறார். மாதவி சொன்னதை எல்லாம் கேட்டு இருவரும் ஆச்சரியப்படுகின்றனர். உடனே மாதவியின் கணவர் சமயத்தில் உன் கூட வாழறதுக்கே பயமா இருக்குமா. ஏன் என்று கேட்க நான் ஏதாவது தப்பு பண்ணாலும் இப்படித்தான் பண்ணுவ என்று கேட்கிறார். சுரேகா இருந்தாலும் அவள எப்படி அண்ணின்னு கூப்பிடுறது என்று கேட்கிறார். நான் எல்லா விதத்துலயும் யோசிச்சு தான் இத பண்ணி இருக்கேன். அர்ச்சனா கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் சூர்யா டைவர்ஸ் கொடுத்தாலும் இன்னொரு பணக்கார பொண்ணு தான் அம்மா கல்யாணம் பண்ணி வைப்பாங்க ஆனா நந்தினி கல்யாணம் பண்ணி வச்சதால நம்மளுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது அவன் நம்மள மீறி எதுவும் பண்ண மாட்டா நம்ம சொல்ற பேச்சை மட்டும் தான் கேட்பா என்றும் சொல்கிறார். ஆனா ஒரு விஷயம் அம்மா எப்படியோ நந்தினியை வீட்டை விட்டு அனுப்ப பாப்பாங்க ஆனா அவங்க அனுப்ப நினைச்சாலும் நம்ம போக விடக்கூடாது அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணனும் அதே மாதிரி நந்தினியும் வீட்டை விட்டு போக கூடாது என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அந்த வேலைக்காரிய கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு பெரிய அவமானத்தை ஏற்படுத்தி கொடுத்துட்டான். அது போதாதுன்னு அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கான். அவர்களுக்கு ஆரத்தி எடுக்க சுந்தரவல்லி ஆரத்தி தட்டை தட்டி விடுகிறார்.
நான் இருக்கிற வரைக்கும் அந்த நந்தினிக்கு இங்க எந்த இடமும் கிடையாது என்று சொல்ல, எங்க அம்மாவுக்கு இனிய அடி மேல அடி விழும், நான் இருக்கிற வரைக்கும் என் பொண்டாட்டி என் கூட தான் இருப்பா என்று சொல்லி சூர்யாவே நந்தினிக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…