தென்னிந்திய திரை உலகில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படமும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருந்தது. பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சர்வதேச அளவில் தொடர்ந்து பல விருதுகளை குவித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். இவரது இசையமைப்பில் இப்படத்தில் பல மில்லியன் பார்வையாளர்கள் கண்டு கழித்து இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினிகாந்த, கமல்ஹாசன், இளையராஜா உள்ளிட்டோரும் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எம்.எம்.கீரவாணி, “கோல்டன் குளோப் விருதால் எனக்கு இன்னும் பொறுப்பு அதிகரித்துள்ளது. அதனால் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Overwhelmed by the response from all over for the Golden Globe ☺️ Thank You for all your wishes ????
— mmkeeravaani (@mmkeeravaani) January 11, 2023