வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும். இந்த விருது ஒரு சிலை, ஒரு தகுதி பட்டயம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு கொண்டதாகும்.

இந்த விருது குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாவது: “ஓ.என்.வி குறுப் இலக்கிய விருது பெறுவதை பெரும் பெருமையாக கருதுகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய பூமியான கேரளத்தில் இருந்து இந்த விருது வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழுக்கு சகோதர மொழி சூட்டிய மகுடமாக நான் இதைக் கருதுகிறேன்.

மலையாளத்தின் காற்றும் தண்ணீரும் கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணில் இருந்து பெறும் விருதை மகுடமாக கருதுகிறேன். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் ஒன்று தான். இந்த உயரிய விருதினை உலகத் தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல கேரளத்தின் புகழ்மிகு ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாக” அவர் பாராட்டியுள்ளார்.

Suresh

Recent Posts

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…

10 hours ago

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ்

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…

10 hours ago

‘3 வித காதலை சொல்​லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..!

'3 வித காதலை சொல்​லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…

11 hours ago

”த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்” – இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்!

''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…

11 hours ago

இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..!

இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…

11 hours ago

Jilley Juice – Video Song

Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…

12 hours ago