Prabhas to star in 'Mission Impossible 7' Director Christopher McQuarrie
ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் பிரபாசுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப் பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்தன. தற்போது இந்திய அளவில் பிசியான நடிகராக வலம்வரும் பிரபாஸ், டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது.
நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றபோது, ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே அவரை சந்தித்து கதை சொன்னதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரேயிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டர் வாயிலாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே, “பிரபாஸ் மிக திறமையான மனிதர் தான். ஆனால் நாங்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததே இல்லை” எனக் கூறியுள்ளார். இதன்மூலம் பிரபாஸின் ஹாலிவுட் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…
பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…
தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses