தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை தனுஷை வைத்து ஏற்கனவே உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி, குட்டி உள்ளிட்ட படங்களை இயக்கியதை தொடர்ந்து உருவான இந்த கூட்டணி பெரும் வெற்றியை அடைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து மித்ரன் அவர்கள் அடுத்ததாக தெலுங்கு நடிகர் நானிக்கு கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஆர்யாவுக்கும் ஒரு கதை கூறுகின்றார் என தெரியவந்துள்ளது.
ஆர்யாவுக்கும் மித்ரன் சொன்ன கதை பிடித்த போக கதையை டெவலப் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விரைவில் மித்ரன் மற்றும் ஆர்யா கூட்டணியை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


