இணைய நண்பர்களே.. “உங்களை ஏமாற்றியதற்கு மன்னியுங்கள்”: ஆதித்யா பிரதோக் சிங்

“பாலிவுட் நடிகையான மிருணாள் தாகூர், இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர். பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் மிருணாள் தாகூர் திரையுலகில் தனக்கான இடத்தை பெற்றார். மேலும், இவருக்கு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.இவர் இப்போது, தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், விஜய் தேவரகொண்டாவுடன் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்திலும் நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திலும் மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மிருணாள் தாகூர் பிரபல இந்தி ராப் பாடகரும் பாடலாசிரியருமான ஆதித்யா பிரதோக் சிங்கை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. அதாவது, நடிகை ஷில்பா ஷெட்டி நடத்திய தீபாவளி பார்ட்டியில், இருவரும் கைகோத்தபடி ஒன்றாக செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தன.இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஆதித்யா பிரதோக் சிங் , \”இணைய நண்பர்களே, உங்களை ஏமாற்றியதற்கு மன்னியுங்கள். நீங்கள் நினைப்பது போல் எதுவுமில்லை\” என்று தெரிவித்துள்ளார்.”,

mirunal-thakur-rumours update
jothika lakshu

Recent Posts

இந்த வாரம் சிறைக்குச் செல்ல போகும் இரண்டு போட்டியாளர்கள் யார்? வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

15 minutes ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

40 minutes ago

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

14 hours ago

துஷார்..கம்ருதீன்.. நாமினேஷன் ஃப்ரீ கிடைக்கப் போகும் போட்டியாளர் யார்? வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

22 hours ago

காந்தாரா படத்தின் 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

22 hours ago

அசிங்கப்படுத்திய மனோஜ், கோபப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…

22 hours ago