mirchi shiva movie update
மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவேளைக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷா.ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்திருக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…