metro shirish provided free corona vaccine to the public
’மெட்ரோ’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிரிஷ், ’ராஜா ரங்குஸ்கி’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ‘பிஸ்தா’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து வரும் சிரிஷ், கொரோனாவால் பாதித்த ஏழை மக்களுக்கும், திரையுலகினருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
அத்தியாவாசிய மளிகை பொருட்கள், உணவு போன்ற உதவிகளை செய்து வந்த சிரிஷ், ஏழை மக்களின் உயிரை காக்கும் விதமாக, இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தி இருக்கிறார்.
சென்னையில் நடத்தப்பட்ட முதல் முகாமில் சுமார் 185 பேருக்கு நடிகர் சிரிஷ் அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அதேபோல், இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட முகாமில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் 196 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மூன்றாவது முகாமில் பொதுமக்கள் 150 பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதோடு, அவர்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இதில், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள், ஏடிஎம் காவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தாலும், சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் சிரிஷின் இத்தகைய செயல்களுக்கு திரையுலகினரிடம் மட்டும் இன்றி பொதுமக்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அடுத்தவங்க கண்ணீர்ல…
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…