Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குட் நைட் பட நாயகிக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம். போட்டோ இதோ

தமிழ் சினிமாவில் வெளியான முதல் நீ முடியும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மீத்தா ரகுநாத்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவரைப்போல் ஒரு மனைவி கிடைத்தால் அந்த வாழ்க்கை சொர்க்கம் என பலரும் இந்தப் படத்தில் இவரின் காட்சி குறித்த வீடியோக்களை ஷேர் செய்து கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

அந்த அளவிற்கு பிரபலமான மீத்தா தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Meetha Raghunath engagement photo update
Meetha Raghunath engagement photo update