2016ல் மிஸ் தென்னிந்தியா பட்டம் வென்ற மீரா மிதுன், தனக்கு திருமணமானதை மறைத்து விட்டார் எனக் கூறி அவரது பட்டம் திரும்ப பெறப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்
இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், பிரபலங்கள் பலரும் தங்கள் பொழுதுபோக்கை பயனுள்ள வகையில் செலவிடுகின்றனர். ஆனால் மீனா மிதுன் பல்வேறு பிரபலங்கள் பற்றி ட்விட்டரில் பல்வேறு வகையில் புகார் தெரிவித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா பற்றி அவர் புகார் கூறியிருந்தார். அவருடைய தோற்றத்தை த்ரிஷா காப்பி அடிப்பதாக மீரா மிதுன் தெரிவித்திருந்தார்.
த்ரிஷாவை மீரா மிதுன் தாக்கி பதிவிட்ட போது அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். உங்களை எப்படி த்ரிஷாவுடன் ஒப்பிடலாம் என அவரை கலாய்த்தனர்.
வார வாரம் ஒரு பிரபலம் பத்தி விமர்சித்து அதற்கு மொக்கை வாங்குவதே மீராமிதுனுக்கு பொழுதுபோக்கு ஆயிடுச்சு போல
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி மீரா பேசி இருப்பதற்கும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தெலுங்கு பெண், அவர் தமிழர்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் என மீரா மிதுன் ட்விட் செய்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் டெட் டாக்ஸ் என்ற நிகழ்ச்சியில் மேடையில் பேசும்போது தான் சிறுவயது முதல் பட்ட கஷ்டங்கள் உட்பட அனைத்தையும் விவரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மேடையில் அவர் பேசும் போது தான் தெலுங்கு பெண் என தெளிவாகவே அவர் குறிப்பிட்டிருந்தார்.