Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

9 வருடங்களுக்குப் பிறகு நயன்தாரா படத்தில் re entry கொடுத்த மீரா ஜாஸ்மின். அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

meera-jasmine-is-making-a-re-entry-with-nayantharas-film

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்கள் மத்தியில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் தற்போது ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருக்கும் “நயன்தாரா 75” திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நயன்தாரா அத்துடன் விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த இயக்குனர் சஷிகாந்த் முதல்முறையாக இயக்க இருக்கும் “டெஸ்ட்” படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடிகர் மாதவன் மற்றும் சித்தார்த் இணைந்து இருந்த நிலையில் இப்படத்தில் தற்போது 9 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீரா ஜாஸ்மின் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இதனை படக்குழு அதிகாரபூர்வமான போஸ்டருடன் அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

meera-jasmine-is-making-a-re-entry-with-nayantharas-film

meera-jasmine-is-making-a-re-entry-with-nayantharas-film