Meenakshi Chowdhury to star in new film directed by Pradeep Ranganathan
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி
தமிழ் சினிமாவில் லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களின் ஹாட்ரிக் வெற்றியால் நடிகராக கவனம் ஈர்த்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது..
அதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் பிரதீப் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், அதுபற்ற்ய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது.
முன்னதாக ரவிமோகன் நடிப்பில் கோமாளி என்ற படத்தை இயக்கி வரவேற்பு பெற்றார் பிரதீப். அதுபோல ரசிகர்களால் இப்படமும் எதிர்பார்க்கப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…