கற்பூரவள்ளியில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
பொதுவாகவே கற்பூரவள்ளி இலைகளை சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவார்கள்.
ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ இருப்பதால் இது பல நோய்களை குணப்படுத்துகிறது.
சளி மற்றும் இருமல் பிரச்சனை மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனையை நீக்குவதில் இந்த இலை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையை விரட்டி செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
கற்பூரவள்ளி இலைகளில் இருக்கும் சத்துக்கள் மூட்டு மற்றும் எலும்பு பிரச்சனைகளை நீக்கி கீல்வாதத்திலிருந்து நம்மை காக்கிறது. இது மட்டும் இல்லாமல் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு கற்பூரவள்ளி இலை மருந்தாக பயன்படுகிறது.