Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தின் அன்சீன் வீடியோ காட்சி வைரல். தளபதி ரசிகர்கள் ஹேப்பி

master movie unseen video viral update

ரசிகர்களால் இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் தனது 67வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படம் தொடர்பான தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்த மாஸ்டர் திரைப்படத்தின் ஆன்சீன் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

அதில், மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய தளபதி விஜய் அவர்கள் நடிகர் விஜய் சேதுபதியிடம் தனக்கு முத்தம் கொடுக்குமாறு கேட்டு வாங்கிக் கொள்ளும் க்யூட்டான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அதனை சுற்றி இருக்கும் படக்குழுவினர்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது பார்வையாளர்களை கவர்ந்து இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.