சமூக வலைதளமான டுவிட்டர், ஆண்டுதோறும் அதிகம் பேசப்பட்ட விஷயம் என்ன என்பது பற்றி சர்வே எடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் எந்த படத்தைப் பற்றி டுவிட்டரில் அதிக பதிவுகள் இடப்பட்டுள்ளன என்கிற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் முதலிடம் பிடித்துள்ளது. பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் அஜித்தின் ‘வலிமை’ படம் உள்ளது. சூர்யாவின் சூரரைப் போற்று 5-வது இடத்திலும், ரஜினியின் தர்பார் 10-வது இடத்திலும் உள்ளது.
அதேபோல் எந்த நடிகர், நடிகைகளைப் பற்றி அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ளது என்கிற பட்டியலையும் டுவிட்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர்களில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், விஜய் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். நடிகர் சூர்யா 5-வது இடத்திலும், தனுஷ் 8-வது இடத்திலும் உள்ளனர்.
நடிகைகளில் கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். ராஷ்மிகா 4வது இடத்திலும், தமன்னா 7வது இடத்திலும் உள்ளனர். ரகுல் பிரீத் சிங், சுருதி ஹாசன், திரிஷா ஆகியோர் முறையே 8, 9, 10 ஆகிய இடங்களில் உள்ளனர்.
Indha varusham namma semma trending ma ????????
Master is officially the most tweeted movie of the year!
↪️ Sandhum bondhum saravedi ↩️ #Master #MostTweetedMovieOfTheYear #MasterTopsTwitter2020 pic.twitter.com/LqeelotzBE— XB Film Creators (@XBFilmCreators) December 14, 2020

