கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’பீர்பால்’. இந்தப் படம் தெலுங்கில் ‘திம்மரசு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் ஜனவரி மாதம் ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ’பீர்பால்’ படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
நடிகர் சாந்தனு ஏற்கனவே ’முருங்கைக்காய் சிப்ஸ்’, ‘ராவண கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

