Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மேரி கிறிஸ்மஸ் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.

marry-christmas-vijay-sethupathi-movie-poster

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் DSP திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் “மேரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் இந்தியில் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் புதிய போஸ்டரை கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் மத்தியில் இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.