Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை சார்மியுடன் திருமணமா? பிரபல இயக்குனர் விளக்கம்

Married to actress Charmi Description of famous director

தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சார்மி, தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார்.

சமீபகாலமாக சார்மிக்கும், இயக்குனர் பூரி ஜெகன்னாத்துக்கும் காதல் என்று தொடர்ந்து கிசுகிசுக்கள் வலம் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. இந்த கிசுகிசுக்குள் குறித்து ஐதராபாத்தில் நடந்த பட விழா நிகழ்ச்சியில் பூரிஜெகன்னாத் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசும்போது, ”எனக்கு சார்மி பல விஷயங்களில் ஆதரவாக இருக்கிறார். நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்கிறோம். 50 வயது பெண்ணுடன் சேர்ந்து படம் தயாரித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். சார்மி இன்னும் இளமையான பெண்ணாக இருப்பதால் எங்கள் இருவரையும் இணைத்து தவறாக பேசுகின்றனர். காதல், கவர்ச்சி எல்லாம் கொஞ்ச நாட்கள்தான் நட்புதான் நிரந்தரம். சார்மியை 13 வயதில் இருந்தே எனக்கு தெரியும். 20 ஆண்டுகளாக அவரோடு சேர்ந்து பயணிக்கிறேன். அவர் எனக்கு நல்ல சினேகிதி. எங்கள் இருவர் இடையே எந்த தவறான உறவும் இல்லை” என்றார்.