Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விமர்சனங்களுக்கு பதில் அளித்து மாரி செல்வராஜ் போட்ட பதிவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய இயக்குனர் மாரிசெல்வராஜ் உதவி செய்தார். படகுகள் மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்று மக்களை பாதுகாப்பாக மீட்டு வந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், தனது சொந்த ஊர் மற்றும் பக்கத்து கிராமங்களில் வெள்ள மீட்பு பணிகளில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டதை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதியின் புகைப்படத்துடன் கூறியுள்ளார்.