Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“வரலாற்று சார்ந்த படமாக இருக்கும்” தனுஷ் நடிப்பில் இயக்கபோகும் புதிய படத்தின் அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்

mari-selvaraj-latest-interview

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாறி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாராகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாறி செல்வராஜ் தனுஷின் அடுத்த படம் குறித்து கூறியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில் அவர், தனுஷுடன் இணைந்து படம் பண்ணுவது முன்பே திட்டமிட்ட ஒன்றுதான். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அதை உடனே தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தை வொண்டர்பார் நிறுவனமே தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அது நானே எதிர்பார்க்காத அப்டேட் என்று கூறியிருக்கிறார்.

மேலும், தனுஷுடன் நான் இணையும் படம் என் கரியரில் மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அப்படம் வரலாற்று சார்ந்த படமாக இருக்கும் என்றும் அதனால்தான் இத்தனை நாள் காத்திருக்க வேண்டியது இருந்தது என்றும் கூறியிருக்கிறார். மேலும் இந்தப் படம் இருவரிம் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும் எனவும் அப்பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

mari-selvaraj-latest-interview

mari-selvaraj-latest-interview