இரவில் குளிக்கும் போது நமக்கு எவ்வளவு நன்மை என்று பார்க்கலாம்.
அனைவரும் பொதுவாக பகலில் குளிப்பது உண்டு ஆனால் இரவில் குளிப்பதன் மூலம் மனமும் உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
இரவில் குளிக்கும் போது மன அழுத்தம் விலகி நல்ல தூக்கம் வரும். மேலும் தலைவலி உடல் வலி மூட்டு வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இரவில் குளிப்பது நல்ல பலன் கொடுக்கும்.
இதனைத் தொடர்ந்து உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இரவில் குளித்தால் நிம்மதியாக இருப்பதை உணரலாம்.
மேலும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் இரவில் குளிப்பதனால் கண்களில் உள்ள உஷ்ணம் குறைந்து புத்துணர்ச்சியாகவும் கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.