லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. நடிகைகள் திரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டிப்பாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை த்ரிஷா புகார் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியுமாறு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…