mansoor-alikhan latest speech
தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் ‘சரக்கு’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மன்சூர் அலிகான், \”சின்ன படங்களை எடுத்துக் கொண்டு வராதீர்கள் நஷ்டம் ஏற்படுகிறது என்று விஷால் சொன்னது தவறு, அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விஷால் நடிகர் சங்க தலைவராக அப்படி சொல்லக் கூடாது.
ஏதோ அவர் பட்ட அனுபவத்தில் சொல்கிறார். ரூ.100 கோடி வைத்துக் கொண்டு விஷாலை வைத்து தான் படம் எடுக்க வேண்டுமா? நடிகர் சங்கத்தில் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும். சித்தா என்ற படம் ரூ.3 கோடி செலவில் எடுக்கப்பட்டது தான், அது நன்றாக ஓடியது. அதுப்போலதான் ரூ.50 லட்சம் கொண்டு ஒருவர் சமூகத்தால் வரவேற்கும் படத்தை கொடுக்கலாம். அதனால் விஷால் பேசியது தவறு. பான் இந்தியா திரைப்படமாக எடுத்தால் தான் சினிமா பார்க்க வேண்டும் என்பது இல்லை. சரக்கு மிகச்சிறந்த திரைப்படம் நல்லா இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தணிக்கைக்குழுவில் அம்பானி சொல்லாதே, அதானி சொல்லாதே என்று கூறுகின்றனர்\” என்று பேசினார்.”,
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…