Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நடுராத்திரியில் போன் போட்டு கலாய்க்கிறார்கள்”: லியோ படம் குறித்து பேசிய மன்சூர் அலிகான்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் லியோ. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருக்கும் லியோ படம் 12 நாளில் 540 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில், படக்குழு லியோ வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த வெற்றி விழா சென்னை நேரு உள்-விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் மன்சூர் அலிகான் மற்றும் படக்குழுவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மன்சூர் அலிகான், “சிவாஜி பேசிய சக்சஸ் வசனம் பேசிய இடத்தில் இருந்து விஜய்யின் நாளைய தீர்ப்பு திரைப்படம் ஆரம்பம் ஆனது. இன்று தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய். நடு ராத்தரியில் போன் செய்து லியோ படத்தில் ஏன் பிளாஷ்பேக் பொய் சொன்ன என்று கலாய்க்கிறார்கள். யாரும் படத்தை பார்த்து தம், சரக்கு அடிக்காதீர்கள். அது எல்லாம் சும்மா, பொய். விஜய் ரசிகர்கள் நாளைய தீர்ப்பை எழுத தயாராக இருங்கள்,” என்றார்.

Mansoor alikhan Latest speech Viral
Mansoor alikhan Latest speech Viral