ஒரு லட்சம் ரூபாய் செலுத்துவதற்கு அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை.

நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் இவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும் விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் பெரும் தொகையான இந்த ஒரு லட்சம் ரூபாயை செலுத்துவதற்கு பத்து நாட்கள் மேலும் அவகாசம் வேண்டும் என்று மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைகேட்ட நீதிபதி ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்து 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

mansoor-alikhan-case-update viral
jothika lakshu

Recent Posts

இயக்குநர் ஷங்கருடன் இணையும் சூர்யா?

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், தனது அடுத்த திரைப்படம் குறித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக…

7 hours ago

தீபாவளிக்கு சிம்பு ரசிகர்களுக்கு சரவெடி விருந்து… ரிலீஸுக்கு தயாராகும் ‘அரசன்’!

நடிகர் சிலம்பரசன், ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து…

7 hours ago

‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிரம்மாண்ட உளவு அதிரடி திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’…

7 hours ago

ஓணம் பண்டிகைக்கு களமிறங்கும் துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஐ எம் கேம்’ படத்தின் வெளியீட்டு தேதி…

7 hours ago

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான குடும்ப பிரச்சனை, விவாகரத்து வழக்கு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சைகள்…

7 hours ago

PEDDI Trailer Tamil

PEDDI Trailer Tamil | Ram Charan | Shiva Rajkumar | Janhvi Kapoor | A R…

3 days ago