Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இறுதியாக மகன் பாடும் பாடலை பார்த்து ரசித்த மனோபாலா. வீடியோ இதோ

manobala-enjoyed-the-last-with-her-sons-singing

கோலிவுட் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமைகளுடன் கம்பீரமாக வளம் வந்தவர் மனோபாலா. பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அனைவரையும் மகிழ்வித்து இவர் சின்னத்திரையில் நடைபெற்ற குக் வித் கோமாளி என்னும் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று இருந்தார்.

சமீப காலமாகவே கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா அவர்கள் கடந்த வாரம் 3 ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் மனோ பாலாவின் கடைசி வீடியோ வெளியாகி உள்ளது. அதில் சிகிச்சையில் இருந்த மனோ பாலாவை அவரது மகன் ஹரிஷ் பாடல் பாடி உற்சாகப்படுத்த முயல்கிறார். இந்த கண்கலங்க வைக்கும் வீடியோ மனோபாலாவின் youtube சேனல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.