தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்றான மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா, பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் இந்திய அளவில் ஐந்து புள்ளி 5.50 கோடி வசூலும் தமிழ்நாட்டில் மட்டுமே ஐந்து கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இனி வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூலில் முன்னேற்றம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


