Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்குமார்.. புகைப்படம் வெளியிட்டு ட்விட்டரில் நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர்..

manju-warrier-two-wheeler-ride-with-ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்ததை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கும் “ஏகே 61” என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தல அஜித் குமார் ஒரு குழுவாக தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலையில் டூவீலரில் பயணம் செய்து சுற்றி வருகின்றனர். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் அந்தக் குழுவில் இணைந்துள்ள நடிகை மஞ்சு வாரியர் தல அஜித்திற்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், “அஜித்துடன் திகில் மிகுந்த இருசக்கர வாகன பயணத்தில் இணைவதில் பெருமையாக நினைக்கிறேன், சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்குமார் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று பதிவிட்டிருக்கிறார். இவரது இந்த பதிவும் இந்த குழுவின் புகைப்படங்களும் தற்போது அஜித் ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.