Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை? காரணம் என்ன தெரியுமா?

Manimekalai has decided to quit from CWC

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மணிமேகலை.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சன் டிவியில் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது சீசனில் செஃப் தாமு உடன் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடத்தி வருகின்றனர். குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்ற மணிமேகலை இந்த சீசனில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில், இந்த சீசனில் பெண் தொகுப்பாளர் குக்காக கலந்து கொண்டவர், என்னுடைய பணியில் அடிக்கடி குறுக்கிட்டு என்னுடைய வேலையை சரியாக செய்யாத வண்ணம் பார்த்துக் கொண்டார் அவருடைய ஆதிக்கமே மன உளைச்சலை ஏற்படுத்தியது.

அந்த பெண் தொகுப்பாளர் நடந்து கொண்டது போல் ஒரு முதிர்ச்சியற்ற நடத்தையை நான் கண்டதில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். “வாழுங்கள் மற்றவர்களையும் வாழ விடுங்கள்” கடுமையாக உழையுங்கள்..! என்று பதிவிட்டுள்ளார்

இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.