Tamilstar
Health

எளிமையான முறையில் செய்யக்கூடிய மாம்பழம் கேசரி..

Mango saffron can be made easily

எளிமையான முறையில் மாம்பழம் கேசரி எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

பொதுவாக மாம்பழங்களில் அதிக சத்துக்கள் மட்டுமில்லாமல் சுவையும் நிறைந்தது.

இப்போது மாம்பழத்தில் கேசரி செய்யலாம் வாங்க..
முதலில் நன்கு பழுத்த மாம்பழத்தை தோல் நீக்கி எடுத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை ஏலக்காய் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

அதே வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து ரவையை வறுத்து எடுத்த பிறகு வேறொரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் ரவையைக் கொட்டி நன்கு கிளற வேண்டும்.

ரவை பாதி அளவு வெந்த பிறகு சர்க்கரை மற்றும் மாம்பழத்தை சேர்த்து நன்கு கிளற வேண்டும். கேசரி பதம் வரும்வரை சிலரி வறுத்து எடுத்து வைத்திருந்த முந்திரி திராட்சை ஏலக்காய் தூவி கிளறி இறக்கினால் சுவையான மாம்பழம் கேசரி தயார்.

மேலும் மாம்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்குவது மட்டுமில்லாமல் சருமம் மென்மையாக இருக்கும்.