தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் விக்ரம். நடிப்பில் தற்போது கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கான தகவல்களை அவ்வப்போது படக்குழு இணையத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறார். இந்த தகவல் அறிந்த ரசிகர்களும் , திரைபிரபலங்களும் அதிர்ச்சியுடன் வருத்தத்தில் இருந்து வந்தனர்.
தற்போது இது குறித்து விக்ரமின் மேனேஜர் சூர்யா நாராயணன் பேட்டி அளித்துள்ளார். அதில் நடிகர் விக்ரம் சார் நலமுடன் உள்ளார், அவருக்கு மாரடைப்பு இல்லை. யாரும் தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது நலமாக இருக்கிறார். ஒரு நாளில் வீடு திரும்பி விடுவார். என்ற தகவலை அளித்துள்ளார். இதனால் அனைவரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.
விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை!#ChiyaanVikram | #Health pic.twitter.com/8FRZpAEWsP
— சினிமா விகடன் (@CinemaVikatan) July 8, 2022

