malaysia to amnesia movie releasing ott
‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் அடுத்ததாக, ‘மலேஷியா டூ அம்னீஷியா’ எனும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.
மேலும் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம் வருகிற மே 28-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் நடிகர் வைபவ்வும், நடிகை வாணி போஜனும் இணைந்து நடித்த ‘லாக்கப்’ படமும் ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…