Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாளவிகா மோகனன் சம்பளத்தை உயர்த்தியதால் தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு.

malavika-mohanan-increased-her-salary update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமான இவர் அதன் பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.

மேலும் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார். மாஸ்டர் படத்தில் இவருக்கு பெரிய அளவில் அதா பாத்திரம் இல்லாத நிலையில் மாறன் திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தற்போது சியான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் இவரை தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெரிய பட்ஜெட் படத்தில் கமிட் செய்ய அணுகிய போது தற்போதைய சம்பளத்தை விட அதிகமாக சம்பளம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியான அந்த தயாரிப்பு நிறுவனம் தங்களது படத்தில் மாளவிகா மோகனனை கமிட் செய்யும் முடிவை கைவிட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.

malavika-mohanan-increased-her-salary update
malavika-mohanan-increased-her-salary update