தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. நான்கு சகோதரிகளின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலில் கதாநாயகியாக லட்சுமி பிரியாவும் கதாநாயகனாக சுவாமிநாதனும் நடித்த வருகின்றனர் தற்போது இந்த சீரியலின் கதை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக டீசர் ஒன்று வெளியாகியிருந்தது டீசர் வெளியான நாள் முதலாகவே யார் யார் போட்டியாளராக பங்கேற்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது அந்த வகையில் வழக்கம் போல் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற லிஸ்ட் ஒன்று தயாராகி இணையத்தில் வெளியாகியிருந்தது அதில் மகாநதி சீரியல் ஹீரோயினான லட்சுமி பிரியாவும் பிக் பாஸ் இல் கலந்து கொள்ளப் போவதாக தொடர்ந்து தகவல்களில் வெளியாக இருந்தது இதற்கு லட்சுமி பிரியா விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது நான் எந்த ஒரு ஆடிஷனுக்கும் செல்லவில்லை நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளதாக தவறான தகவல்கள் பரவி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க எந்த ஒரு அழைப்பும் எனக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் இதுவரை இவர் பிக் பாஸ்க்கு செல்ல போகிறார் என்று பரவி வந்த தகவல் முற்றிலும் வதந்தி என தெரியவந்துள்ளது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
