Mahaan First Look
விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தை இதுவரை ‘சியான் 60’ என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இதேபோல் விக்ரமின் சாமி படத்தின் போஸ்டர் ஒன்று இதற்கு முன் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது சாமி பட போஸ்ட்டரை இன்ஸ்பிரேஷனாக வைத்து தான் மகான் பட போஸ்டரும் வெளியாகியுள்ளது என கூறிவருகின்றனர்.
அதுமட்டுமின்றி இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் சாமி படத்தின் பேமஸ் பாட்டை ஓடவிட்டுருப்பார்.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…