வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் 64 படத்தையும் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருவதால் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் அஜித் 64 குறித்து சில வதந்திகள் பரவி வருவதால் ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்து பதிவிட்டு உள்ளார். அதில் இப்போதுதான் சுரேஷ் சந்திரா சாரிடம் பேசினேன் என்றும் ஏகே 64 படத்தினை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் சிறுத்தை சிவா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அஜித்குமாரின் எதிர்கால படங்களை இயக்க வரிசையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் எனவே எப்போதும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருங்கள் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

9 hours ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

9 hours ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

1 day ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

1 day ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

1 day ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

1 day ago