முருங்கைக்காய் குறைவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை.
முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. முருங்கைக்காய் அதிகளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் முருங்கையில் விட்டமின்கள் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.
முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் காணப்படுகிறது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.
முருங்கைக்காயானது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் வல்லது. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.
முருங்கைக்காய் தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது. முருங்கைகாயில் செரோடோனின், டோபமைன் மற்றும் நோரர்டேன்லைன் போன்றவை உள்ளன. இவை நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
முருங்கைக்காய் குறைவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…