Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விடாமுயற்சியின் கதை குறித்து விளக்கம் கொடுத்த இயக்குனர் மகிழ்திருமேனி

Magizh Thirumeni about the story of the film Vidaamuyarchi Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா ,அர்ஜுன், ஆரவ், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜனவரி 23ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விடாமுயற்சியின் கதை குறித்து மகிழ்திருமேனியிடம் கேட்டபோது அதற்கு அவர் ஒரு மனிதனுடைய சோர்வடையாத முயற்சி தான் இந்த படம்.இந்த கேரக்டருக்கு படத்தில் சில லேயர்ஸ் இருக்கு படத்தின் மையக் கதையுடன் உறவுகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமும் இருக்கு. எல்லாத்தையும் ஒரு சேர காப்பாற்ற ஒரு மனிதன் நடத்தக்கூடிய பிரயத்தனம் தான் இந்த கதை என்று கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த தகவலால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Magizh Thirumeni about the story of the film Vidaamuyarchi Update
Magizh Thirumeni about the story of the film Vidaamuyarchi Update