தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் மதுமிதா. பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் இந்த சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார்.
ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்புடன் ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வந்த இந்த சீரியல் மாரிமுத்துவின் மறைவிற்கு பிறகு அப்படியே பின்னடைவை சந்திக்க தொடங்கியது.
மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்புகளை பெற தொடங்கிய இந்த சீரியலை சீரியல் குழு மொத்தமாக முடிக்க முடிவெடுத்தது. இந்த நிலையில் இந்த வாரத்தில் எதிர்நீச்சல் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மதுமிதா எதிர்நீச்சல் வருடம் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டு இது இதயமே நொறுங்கிப் போன தருணம் என சீரியல் குறித்து எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு
View this post on Instagram