சின்னத்திரை மூலம் தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் மாஸ் காட்டி வரும் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் ஷங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 4.5 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து சூப்பர் ஹிட் அடித்து வருவதாக படக்குழு ஸ்பெஷல் வீடியோவுடன் அறிவித்துள்ளது. அதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.
4.5M+ real time views in 24hours for #Maaveeran Trailer!????
???? @Siva_Kartikeyan ????????
???? @madonneashwin ????????#MaaveeranTrailer #VeerameJeyam#MaaveeranFromJuly14th @AditiShankarofl @bharathsankar12 @ShanthiTalkies @iamarunviswa @DirectorMysskin #Saritha… pic.twitter.com/XDqiyAws6a— Shanthi Talkies (@ShanthiTalkies) July 3, 2023

