Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாவீரன் படத்தின் சக்சஸ் மீட். புகைப்படங்கள் வைரல்

maaveeran-movie-success-meet-celebration-photos

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பலமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படகுழு சக்சஸ் மீட் நடத்தியுள்ளனர். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற படகுழுவினரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.