தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறது. மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பரத் சங்கர் இசையமைப்பில் அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றி இருக்கும் அமேசான் பிரைம் நிறுவனத்தைத் தொடர்ந்து சாட்டிலைட் உரிமைத்தை கைப்பற்றி இருக்கும் பிரபல நிறுவனம் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.
We are Elated to announce that @SunTV is our satellite partner for #Maaveeran/#Mahaveerudu ????????@Siva_Kartikeyan #MaaveeranOnSunTv #VeerameJeyam @madonneashwin @AditiShankarofl @DirectorMysskin @iamarunviswa @iYogiBabu @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 pic.twitter.com/MFwXqrZACI
— Shanthi Talkies (@ShanthiTalkies) March 11, 2023

