தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரின்ஸ் படத்தை தயாரித்த சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார்.
இதில் கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்க யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு எண்ணூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சியின் படப்பிடிப்பின் வீடியோ இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதில் இப்படத்தின் சண்டைக் காட்சிக்காக போடப்பட்டுள்ள செட்டடின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Maaveeran shooting spot @ Ennore ????????
Fight scene shoot⚡ pic.twitter.com/nyKtc0SvUF— SKish_a (@Itsz_Aiisshu) November 30, 2022