மாநாடு படம் இந்த வாரம் பிரமாண்டமாக திரைக்கு வருகிறது.
இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் மாநாடு படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வர, அரசாங்கத்திடம் வந்த அறிவிப்பு ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சியாக்கியுள்ளது.
அதோடு மாநாடு தயாரிப்பாளரை உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால் கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தாலே இனி தியேட்டரில் அனுமதி என்று ஒரு உத்தரவு வந்தது.
அதை தொடர்ந்து மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை, அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!’ என்று டுவிட்டரில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! https://t.co/UI7l5DpNKQ
— sureshkamatchi (@sureshkamatchi) November 22, 2021

