MAAMANNAN Movie Update
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று மாரி செல்வராஜ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது அப்படத்தின் டைட்டில் போஸ்டரையும் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் பெயர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ‘மாமன்னன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெரும் நடிகர்கள் பட்டாளம் இணைந்திருக்கும் மாமன்னன் படத்திற்கு அறிவிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…
நடிகை திரிஷா சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை மாளவிகா ரகுநாத் என்பவர்…
நடிகர் அஜித்குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்ட ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’. இயக்குநர் ஏ.எல். விஜய்…
‘கிடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படம் ‘தகப்பன்’.…
வித்தியாசமான கதைக்களம் கொண்ட புதிய திரைப்படத்தை Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு…
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records