கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாமன்னன்”. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இதில் நடிகர் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்ததை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏ ஆர் ரகுமான் இசையில் முதல்முறையாக வைகைப்புயல் வடிவேலு இணைந்து பாடியுள்ள பாடலை வரும் மே 19ஆம் தேதி வெளியிட இருப்பதாக புதிய தகவலை படக்குழு போஸ்டருடன் அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.
Get ready for the musical storm.
The first song from #MAAMANNAN drops on May 19th????????. @mari_selvaraj @arrahman @Udhaystalin @KeerthyOfficial #Vadivelu #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @SonyMusicSouth… pic.twitter.com/pyJrap1Yv9
— Red Giant Movies (@RedGiantMovies_) May 17, 2023

